அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணிக்கு ஒப்புதல்! மக்களின் வெற்றி என பெருமிதம்

அமெரிக்காவின் கலிபோர்னியா-ஓரிகான் எல்லையில் உள்ள நான்கு அணைகளை அகற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அணை அகற்றம் 

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிளாமத் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் அணைகள், சினூக் சால்மன் மீன்கள் இனம் அழிந்து வர காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

எனவே, இந்த நான்கு அணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூரோக் பழங்குடியினர் நீண்ட காலமாக கூறி வந்தனர்.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணிக்கு ஒப்புதல்! மக்களின் வெற்றி என பெருமிதம் | Usa Approved For Remove Dam In Klamath River

(Molly Peterson/KQED)

இந்த நிலையில் கலிபோர்னியா – ஓரிகான் எல்லையில் உள்ள நான்கு அணைகளை அகற்ற இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஃபெடரல் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அணை உரிமங்களை ஒப்படைத்து, இந்த அணைகளை அகற்றுவதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணிக்கு ஒப்புதல்! மக்களின் வெற்றி என பெருமிதம் | Usa Approved For Remove Dam In Klamath River

(AP Photo/Gillian Flaccus, File)

இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணியாகும்.

இதன்மூலம் கிளாமத் ஆற்றின் ஆரோக்கியம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழங்குடியினர் வெற்றி 

இதுகுறித்து யூரோக் பழங்குடியினரின் தலைவர் ஜோசப் ஜேம்ஸ் ஒரு அறிக்கையில் கூறுகையில், ‘கிளமத் சால்மன் வீட்டிற்கு வருகிறது. மக்கள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர்.

இதன்மூலம், காலத்தின் தொடக்கத்தில் இருந்து எங்கள் மக்களைத் தாங்கிய மீன்களுக்கு நாங்கள் எங்கள் புனிதக் கடமையைச் செய்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.   

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணிக்கு ஒப்புதல்! மக்களின் வெற்றி என பெருமிதம் | Usa Approved For Remove Dam In Klamath River  

@Thomson Reuters

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.