டெல்லியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு செக் – எடப்பாடி பழனிசாமி மூவ்..!

அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒற்றைத் தலைமை
அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்

தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த

மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

எதிர்ப்பு
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தீா்ப்பளித்தாா். தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதேபோல ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், பொதுக்குழு உறுப்பினருமான அம்மன்.பி.வைரமுத்து சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இறுதி விசாரணை
இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த அவசரப்படுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து நீதிபதிகள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு வழக்கில் பதில் அளிக்கும்படியும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை ஏற்று பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவாதம் அளித்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற நவம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இபிஎஸ் பதில் மனு
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், “தொண்டர்கள் விருப்பம், கட்சியின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு கூட்டுவதற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை ஓ.பன்னீர்செல்வம் மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற தகுதியற்றவர் ஓ.பன்னீர்செல்வம்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஓபிஎஸ் அலர்ட்
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அலர்ட் ஆகி உள்ளனர். மேலும், உச்ச நீதிமன்றத்தில் பதிலடி கொடுக்கவும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கறிஞர்கள் தயாராக உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.