Whatsapp Business பயனாளர்களுக்கு புதிய வசதிகள் அறிமுகம்!

Meta நிறுவனத்தின்
கட்டுப்பாடில் உள்ள Whatsapp செயலியில் Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்கள் இனி புதிய வசதிகளை பெறலாம். இந்த புதிய அப்டேட் மூலம் இனி பயனர்கள் புதிய வணிகத்திற்கு தேடவும் வணிக ரீதியாக சேட் செய்யவும் முடியும். இதில் நாம் பொருட்களை ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யவும் முடியும்.

இதில் தனித்தனியாக நாம் தேடல் செய்ய முடியும். வங்கி சம்பந்தப்பட்ட விஷயங்கள், பயணம், போன்றவற்றை நாம் Search box உள்ளே Search செய்து அது சம்பந்தப்பட்ட விஷயங்களை தேடலாம்.

இந்த அப்டேட் தற்போது பிரேசில், கொலம்பியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, UK ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்த அப்டேட் வெளியிடப்படும்.

இந்த புதிய வசதி மூலமாக இனி சுலபமாக நமது வணிக தேவைக்காக இந்த செயலியை பயன்படுத்தலாம். இதைத்தவிர நேரடியாக
Whatsapp மூலமாகவே
பொருட்களை ஷாப்பிங் செய்யவும் முடியும்.

இது Jiomart Shopping போலவே வேலை செய்யும். வரும் காலத்தில் இந்த வசதி அணைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று MEta தெரிவித்துள்ளது. இதில் பயனர்களின் விவரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளது.

ஏற்கனவே
Whatsapp நிறுவனம் அதன் Communities வசதியை
ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய செயலிகளுக்கு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனி நாம் 32 வரை ஒரே நேரத்தில் வீடியோ காலிங் பேசமுடியும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.