அரசுப் பள்ளியில் சிசிடிவி கேமிராக்களை பொருத்திய சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்!

பெரம்பலூர் அருகே காரை அரசுப்பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், ரூ.1 லட்சம் செலவில் பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தித் தந்த சமூக ஆர்வலர் கலைவேந்தனை அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே காரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் காரை, தெரணி, வரகுபாடி, புதுக்குறிச்சி, நாரணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 485 மாணவர்கள்பயின்று வருகின்றனர். நல்ல சுற்றுச்சூழலுடன் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளியில் பள்ளி முடிந்தபிறகும், விடுமுறை நாட்களிலும் சமூக விரோதிகள் நுழைந்து மது அருந்துவதும் மது அருந்திய பாட்டில்களை அங்கேயே விட்டுசெல்வதுமாக இருந்துள்ளனர்.
image
மறுநாள் மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வரும்போது வளாகத்திற்குள் மதுபாட்டில்கள் கிடப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை தடுக்கவேண்டும் என நினைத்த பள்ளி தலைமை ஆசிரியர் அக்பர்கான் தலைமையிலான ஆசிரியர்கள் காரை பகுதிகளில் சமூகப்பணி செய்துவரும் கலைவேந்தன் என்பவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
image
அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் கலைவேந்தன் த்னது சொந்த செலவில் 1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 6 சிசிடிவி கேமராக்களை பள்ளி வளாகத்தில் பொருத்திக் கொடுத்துள்ளார். அதன்பிறகு சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் வருவது அடியோடு தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காரை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
image
இது தொடர்பாக சமூக ஆர்வலர் கலைவேந்தனிடம் கேட்டபோது, பிற அரசுபள்ளிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தன்னால் முடிந்ததை செய்து தர தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே வரகுபாடி கிராமத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் வறியவர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து கால்நடை(மாடு) வாங்கி இலவசமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.