ஜெருசலேம் குண்டுவெடிப்பு: பலியான கனேடிய சிறுவனின் குடும்பத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்


ஜெருசலேமை உலுக்கிய இரட்டை குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த கனேடிய சிறுவனின் குடும்பத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமின் புறநகரில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், இன்று நடந்த இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர் கனடாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என இஸ்ரேலுக்கான கனேடிய தூதர் லிசா ஸ்டேடல்பவுர் உறுதி செய்தார்.

ஜெருசலேம் குண்டுவெடிப்பு: பலியான கனேடிய சிறுவனின் குடும்பத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் | Justin Trudeau Jerusalem Bombings Canadian DeathMenahem Kahana/AFP/Getty Images

அதையடுத்து வெளியான தகவல்களின்படி, உயிரிழந்த இளைஞர் ஆர்யே ஷூபக் (Aryeh Schupak) என அடையாளம் காணப்பட்டார். குண்டுவெடிப்பு நடந்தபோது அவர் யூத செமினரிக்கு சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குண்டுவெடிப்பில் உயிரிழந்த கனேடிய சிறுவனின் குடும்பத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் குண்டுவெடிப்பு: பலியான கனேடிய சிறுவனின் குடும்பத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் | Justin Trudeau Jerusalem Bombings Canadian DeathAryeh Schupak Credit: Arutz Sheva, Shutterstock

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெருசலேமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கனேடிய சிறுவன்  உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களையும் நினைவில் கொள்கிறேன். இந்த வன்முறையை கனடா கடுமையாக கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமை உலுக்கிய இந்த சம்பவம், பாலஸ்தீனிய போராளிகளின் தாக்குதல் என இஸ்ரேல் பொலிசார் கூறியதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.