மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்! ராமச்சந்திரா மருத்துவமனை தகவல்..

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் உடல்நலம் தேறி வருவதாகவும், ஒன்று அல்து இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என இன்று மாலை 3மணி அளவில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு படங்களில் நடித்து வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிற்பகல் வெளிப்புற படப்பிடிப்புகளை முடித்து விட்டு சென்னை திரும்பினார். அவருக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் முழு உடல் பரிசோதனை எடுக்கும்படியும் கூறினர்.

இதையடுத்து, அங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று மாலை கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை 3 அளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கமல்ஹாசன் நேற்று லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருமலும், சளியும் இருந்தது. தற்போது சிகிச்சையி பெற்று வருகிறார். அவர் ஒரிரு நாளில்  டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்து உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.