FIFA உலகக்கோப்பையில் சொந்த நாட்டுக்கு எதிராக கோல் அடித்த சுவிஸ் வீரர்! மைதானத்தில் செய்த செயல்

சுவிஸ் வீரர் கோல் அடித்ததும் கொண்டாடாமல் அமைதியாக நின்றது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வெற்றிக்கான கோல்

கத்தார் உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் சுவிட்சர்லாந்து – கேமரூன் அணிகள் மோதின.

அல் ஜனோப் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் 48வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோ கோல் அடித்தார்.

FIFA உலகக்கோப்பையில் சொந்த நாட்டுக்கு எதிராக கோல் அடித்த சுவிஸ் வீரர்! மைதானத்தில் செய்த செயல் | Swiss Player Stunned After Goal Cameroon Fifa Wc

@AFP

ஆனால் கோல் அடித்ததற்காக கொண்டாடாமல் அமைதியாக அவர் நின்று விட்டார்.

இதற்கு காரணம் அவர் பிறந்தது கேமரூன் நாட்டில் தான். தனது சொந்த நாட்டிற்கு எதிராக கோல் அடித்ததால் அவர் சற்று சங்கடப்பட்டார்.

எனினும் தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை எம்போலோ வெளிப்படுத்தினார்.

இறுதிவரை கேமரூன் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

FIFA உலகக்கோப்பையில் சொந்த நாட்டுக்கு எதிராக கோல் அடித்த சுவிஸ் வீரர்! மைதானத்தில் செய்த செயல் | Swiss Player Stunned After Goal Cameroon Fifa Wc

@AP

இந்தப் போட்டியில் சுவிஸ் அணி 514 முறையும், கேமரூன் அணி 494 முறையும் பந்தை பாஸ் செய்தன.

சொந்த நாடு

தனக்கு 5 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் பிரிந்ததால், தனது தாயுடன் பிரான்சுக்கு குடிபெயர்ந்த எம்போலோ, இறுதியில் சுவிட்சர்லாந்தில் குடிபுகுந்தார்.

பிரீல் எம்போலோ/Breel Embolo

@Getty Images

முன்னதாக, பன்டஸ்லிகா தொடரில் விளையாடியபோது அளித்த பேட்டியில், ‘நான் இப்போது 60 அல்லது 70 சதவீதம் சுவிஸ் நாட்டில் இருக்கிறேன், நான் அப்பிரிக்கன் என்பதை விட அதிகம்’ என தெரிவித்துள்ளார்.      

FIFA உலகக்கோப்பையில் சொந்த நாட்டுக்கு எதிராக கோல் அடித்த சுவிஸ் வீரர்! மைதானத்தில் செய்த செயல் | Swiss Player Stunned After Goal Cameroon Fifa Wc

@AP Photo/Ebrahim Noroozi

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.