இந்திய வரலாற்றை தைரியமாக திருத்தி எழுதுங்க நாங்க இருக்கோம்… வரலாற்று அறிஞர்களுக்கு அமித் ஷா அழைப்பு!

17 ஆம் நூற்றாண்டில் அஸாம் மாநிலத்தை ஆட்சி புரிந்துவந்த அஹோம் ராஜ்ஜியத்தில் வீர, தீரம் மிக்க போர்ப் படை தளபதியாக திகழ்ந்தவர் லச்சிட் போர்புகன். அஸாம் மீதான முகலாய படையெடுப்பை முறியடித்ததில் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்துள்ளதாக அஸாம் மாநில வரலாறு கூறுகிறது.

இத்தகைய சிறப்புமிக்கவரின் பிறப்பை கௌரவி்க்கும் விதமாக, லச்சிட் போர்புகனின் பிறந்த நாளான நவம்பர 24 தேதியை அஸாம் மாநிலத்தில் லச்சிட் திவாஸ் என்ற பெ.பரில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருவதுடன், அன்றைய தினம் அரசு விடுமுறையும் விடப்படுகிறது.

லச்சிட் திவாஸை முன்னிட்டு அஸாம் மாநில அரசின் சார்பில் டெல்லியில் நேற்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் பேசியது:

நமது வரலாறு நமக்கு சரியாக சொல்லப்படவில்லை அல்லது திரிக்கப்பட்டுள்ளதாக பலர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன. ஒரு வரலாற்று மாணவனாக எனக்கும் இந்த சந்தேகம் இருந்து கொண்டே தான் உள்ளது.

அஸாமில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, முகலாய சம்ராஜ்ஜியத்துக்கே சிம்ம சொப்பமாய் திகழ்ந்த லச்சித் போன்று, இந்தியாவை 150 ஆண்டுகள் ஆட்சி செய்த 30 வம்சங்கள் மற்றும் நாட்டின் சுகந்திரத்துக்காக போராடிய 300 க்கும் மேற்பட்ட ஆளுமைகள் குறித்த வரவாறு நமக்கு சொல்லவே படவில்லை அல்லது சரியாக சொல்லப்படவி்ல்லை.

அளப்பரிய வீர, தீரத்துடன் திகழ்ந்த இவர்களை குறித்து இனியாவது நம் இளம்தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டிய தலைமயாய கடமை நமக்கு உள்ளது. எனவே திரித்து எழுதப்பட்ட நம் இந்திய வரலாற்றை திருத்தி எழுத தயவுகூர்ந்து நம் வரவாற்று ஆசிரியர் முன்வர வேண்டும்.

அவர்களுக்கு மததிய பாஜக அரசு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார் அமித் ஷா. வரலாற்றை திருத்தி எழுதும் நமது முயற்சியை தற்போது இங்கு தடுப்பவர்கள் யார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 75 ஆண்டுகளில் கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸோ அல்லது அதன் ஆதரவிலான கூட்டணி கட்சிகளோ தான் நாட்டை ஆண்டு வந்துள்ளன.

இதன் காரணமாக இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தி, நேரு போன்றவர்களின் பங்களிப்பை மட்டும்தான் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வரலாற்று பாடங்களில் அதிகம் இடம்பெற மத்திய, மாநில அரசுகள் செய்துள்ளன என்றும், அதேசமயம் வல்லபாய் படேல், வீர சவர்க்கார் போன்றவர்கள் சுதந்திர போராட்டத்தின் போதும், நாடு விடுதலை அடைந்த பின்பும் நாட்டுக்கு ஆற்றிய சேவைகள் நம் வரலாற்றில் இரட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதாக பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற அரசு விழாவில் அமித் ஷா இவ்வாறு பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.