7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி., அபார வெற்றி| Dinamalar

ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாம் லாதம் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று ‛டி-20′, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. ‛டி-20′ தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்த நிலையில் ஆக்லாந்தில் முதலாவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக வழிநடத்துகிறார். ‛டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் துவக்கம் தந்தனர். இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர். ஷிகர் தவான் அவ்வபோது பந்தை பவுண்டரி எல்லைக்கு அனுப்பினார். முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தபோது அரைசதம் அடித்த கில் (50) அவுட்டானார்.

அடுத்த ஓவரில் தவான் 72 ரன்னில் (13 பவுண்டரி) வெளியேறினார். பின்னர் ஸ்ரேயாஷ் உடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பன்ட் (15), சூர்யகுமார் (4) ஏமாற்றினர்.

latest tamil news

சஞ்சு சாம்சன் தன் பங்கிற்கு 36 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் 80 ரன்னில் கடைசி ஓவரில் கேட்சானார். கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் அணியின் ஸ்கோர் 300ஐ தொட்டது.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. 16 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னுடனும், ஷர்துல் தாகூர் 1 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுத்தீ, பெர்குசன் தலா 3 விக்., வீழ்த்தினர்.

latest tamil news

இதன் பின்னர் 307 ரன்கள் இலக்கு என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் பின் ஆலென் 22, டெவன் கன்வே 24 ரன்களிலும், மிச்சல் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்ஸ் மற்றும் டாம் லாதம் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இதனால் அந்த அணி 47.1 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 309 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

latest tamil news

அதிரடியாக விளையாடிய டாம் லாதம் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர்,104 பந்துகளில் 145 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்களுடம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியின் உம்ரான் மாலிக் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.