Twitter Blue வரும் டிசம்பர் 2 புதிய கலர்களுடன் வெளியாகும்! Elon Musk அறிவிப்பு!

எலன் மஸ்க் Twitter Blue குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் போலியான கணக்குகளை தெரிந்துகொள்வதற்காக ட்விட்டரில் இனி கோல்ட், ப்ளூ, க்ரே என மூன்று நிறங்களில் செக் மார்க் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த புதிய அப்டேட் கொண்ட
Twitter Blue வரும் டிசம்பர் 2
அன்று வெளியாகும் என்று கூறியுள்ளார். ட்விட்டர் செயலியில் பிரபலங்களுக்கு வழங்கப்படும் ப்ளூ செக் மார்க் பெற இனி 8 டாலர் பணம் செலுத்தவேண்டும் என்ற அவரின் அறிவிப்பால் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தின.

பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து Twitter கணக்கை மூடிவிட்டு வெளியேறினார். ஆனாலும் எலன் மஸ்க் ட்விட்டர் என்பது அனைவருக்குமானது இதனால் யார் வேண்டும் என்றாலும் பணம் செலுத்தி இந்த ப்ளூ செக் மார்க் பெறலாம் என்று கூறியுள்ளார்.

இன்னார் Twitter Blue வெளியாகியது. அப்போது பணம் செலுத்தி லட்சக்கணக்கான போலி கணக்குகள் அதிகார பூர்வ நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களை போல துவக்கி சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டனர்.

இதனால்
Twitter Blue உடனடியாக நிறுத்தப்பட்டு
இவ்வாறு மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கு மாற்றாக கோல்ட், க்ரே, ப்ளூ என மூன்று நிறங்களில் செக் மார்க் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதில் கோல்ட் செக் மார்க் நிறுவனங்களின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கு வழங்கப்படும். க்ரே செக் மார்க் அதிகார பூர்வ அரசு கணக்குகளுக்கும், ப்ளூ செக் மார்க் தனிநபர் கணக்குகளுக்கும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து கணக்குகளும் முதலில் ட்விட்டர் குழுவால் தனித்தனியாக சரிபார்க்கப்பட்டு பிறகு இந்த செக் மார்க் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த செய்தியை எலன் மஸ்க் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு வாயிலாக தெரிவித்துள்ளார்.

இந்த அப்டேட் வந்ததற்கு பிறகு இனி யாராவது அவர்களின் ப்ளூ செக் மார்க் கிடைத்தபிறகு பிரபலங்களை போல பெயர் மாற்றினால் உடனடியாக அவர்களின் கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ட்விட்டர் நிறுவனதஹிக்ரு மீண்டும் விளம்பரதாரர்களை வரவழைக்க எலன் மஸ்க் முயன்றுவருகிறார். இதே போல இன்னும் பல நிறங்களில் செக் மார்க் வரும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எவ்வளவு முயன்றாலும் போலியான கணக்குகளை முடக்க முடியாது. புதிய நபர்கள் வந்துகொண்டே இருப்பார்கள் அவர்களை எல்லாம் சமாளிக்க அவருக்கு பொறியாளர்கள் தேவை. அதற்காகவே அவர் தற்போது விளம்பரம் மற்றும் கோடிங் போன்றவற்றிற்கு ஆட்களை மீண்டும் பணிக்கு சேர்த்துவருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.