சார்லஸ் டார்வின்கையெழுத்திட்ட ஆவணம் ரூ.9 கோடிக்கு ஏலம்| Dinamalar

நியூயார்க்: புகழ்பெற்ற உயிரியலாளர் ‘ சார்லஸ் டார்வின்’ கையெழுத்திட்ட ஆவணம் ஏலம் விடப்பட உள்ளதாகவும் அதனை ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல உயிரியலாளரும், இயற்கையியல் விஞ்ஞானியான சார்லஸ் டார்வின், மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை வகுத்தார். அவர் தனது நூலனான ‘The Origin of Species by Natural Selection’ என்கிற புத்தகம் அமோக வரவேற்பைப் பெற்றது. அதில் ‘மனிதனின் முன்னோர்கள் குரங்குகள் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து காட்டினார். பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இவரது கையெழுத்திடப்பட்டுள்ள ” பரிணாம கோட்பாடு” பற்றி ஆவணத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சொதேபை என்ற பிரபல ஏலம் நிறுவனம் பாதுகாத்து, பராமரித்து வைத்துள்ளது. இந்த ஆவணம் விரைவில் ஏலத்திற்கு வருகிறது. இந்த ஆவணத்தை தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ,9 கோடியே 85 லட்சத்து, 21 ஆயிரத்து 780 க்கு ஏலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவன இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.