மொத்தம் 5 வரப்போகுது… மாஸாகும் கோவை தெற்கு… வானதியின் அடுத்த டார்கெட் இதுதான்!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் 63வது வார்டில் 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்காக பாஜக எம்.எல்.ஏ

இன்று தொடங்கி வைத்தார். இதற்காக தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குடிநீரை பயன்படுத்தும் வகையில் 63வது வார்டு மக்களுக்கு நவீன அட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்

இதைக் கொண்டு நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் வரை எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் வரிசையாக குடங்களுடன் வந்து நின்று தண்ணீர் பிடித்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், இதுபோன்ற இயந்திரங்கள் கோவை தெற்கு தொகுதியில் ஐந்து இடங்களில் நடப்பாண்டே நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது

கோவை மாநகரில் சாலை வசதிகள் சரியாக இல்லை. இதையொட்டி பாஜக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். சாலை வசதிகளை பொறுத்தவரை கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசு துரோகம் செய்து வருகிறது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. மாநகராட்சி தேர்தலின் போது கொலுசு கொடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டினார்.

சூயஸ் திட்டத்தின் பயன்

இதற்கான பாடத்தை கோவை மக்கள் அவருக்கு புகட்டுவார்கள். நான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். அரசு செய்ய வேண்டிய பணிகளை அவர்கள் புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது. சூயஸ் திட்டம் என்பது 24 மணி நேரம் குடிநீர் வழங்குகிற திட்டம். அதேசமயம் பொது குடிநீர் குழாய்களை அவர்கள் அகற்றினால், உடனடியாக மாநகராட்சி தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினார்.

காயத்ரி ரகுராம் என்ன செய்திருக்க வேண்டும்?

பாஜகவில் பெண்களை தரக் குறைவாக நடத்துவதாக தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவருக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இதற்கென கட்சியில் உள்ள நபர்களிடம் முறைப்படி தெரிவித்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம்.

பலமாக இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி

இனிமேலாவது அப்படிப்பட்ட முயற்சிகளை எடுத்தால் சரியாக இருக்கும் எனத் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு, இன்றைய தேதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருக்கிறது. அதில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்று வானதி சீனிவாசன் பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.