2-வது ஒருநாள் போட்டி: பதிலடி கொடுக்குமா இந்தியா ? வங்காளதேசத்துடன் நாளை மோதல்

மிர்பூர்,

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.-

இந்தியா-வங்காளதேச அணிகள் மேலும் 2-வது ஒரு நாள் போட்டி மிர்பூரில் நாளை (7-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தோற்றால் ஒரு நாள் தொடரை இழந்துவிடும். இதனால் இந்திய அணி வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

லிட்டன் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

வெற்றி நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.