6 மாதத்திற்குள் 5G சேவை துவங்க BSNL முடிவு! JIO, Airtel கலக்கம்!

மொபைல் சேவை பயன்பாட்டிற்கு வந்ததும் முதல் முதலாக டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான நுழைந்த நிறுவனம் என்றால் அது BSNL நிறுவனம் தான். செல்போன் என்றால் என்ன என்று தெரியாத காலத்திலேயே 3G சேவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தது.

ஆனால் Jio மற்றும் AIrtel போன்ற தனியார் நியூர்வனங்களின் வளர்ச்சியாலும் போதிய நிதி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு செய்யப்படாததால் இந்த நிறுவனம் தற்போது மிகவும் பின்தங்கியுள்ளது.

அதை மீண்டும் உயிர்ப்பிக்க இன்னும் 6 மாதங்களுக்குள் புதிதாக இந்தியா முழுவதும் வசதிகள் ஏற்படுத்தி 5G சேவை வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காகவே வருடத்திற்கு 500 முதல் 4000 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து இந்த சேவை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BSNL நிறுவனம் இதன் போட்டியாளர்களை விட கூடுதலாக செல்லமுடியாத இடங்களில் எல்லாம் சேவை வைத்துள்ளதாகவும் நிச்சயம் அது
இந்த 5G சேவை வழங்க பயன்படும்
என்றும் தெரிவித்துள்ளது. மற்ற நிறுவனங்களின் டவர் எண்ணிக்கையை விட BSNL நிறுவனம் கூடுதலாக இந்தியா முழுவதும் சுமார் 1.35 லட்சம் டவர் வைத்துள்ளது.

இதற்காகவே TCS (Tata Consultancy Services) நிறுவனத்திடம் 5G தொழில்நுட்பத்தை கேட்டுள்ளதாகவும் விரைவில் 5G சோதனையை தொடங்கப்போவதாகவும் BSNL தெரிவித்துள்ளது.

இந்த 5G சேவை என்பது நகர் புறங்களை விட கிராமங்களை பெரிய அளவு முன்னேற்றும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த மேம்பாட்டு நிதிக்காக அரசிடம் 3000 முதல் 4000 ஆயிரம் கோடி வரை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்காக 700MHZ அலைக்கற்றையை அரசிடம் BSNL நிறுவனம் கேட்டுள்ளது. இது தற்போது Jio நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. BSNL நிறுவனத்திற்கு அரசு சார்பில் ஏற்கனவே 600MHZ அலைக்கற்றை ஒதுக்கப்பட்டுள்ளது.

BSNL நிறுவனத்தின் இந்த
5G வருகை நிச்சயம் Airtel, Jio, Vi
ஆகிய நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும். BSNL நிறுவனத்திற்கு அனைத்து இடங்களிலும் இணைய சேவை வசதி இருந்தாலும் வேகம் இல்லை. தற்போது மக்களுக்கு அதிக வேகம் தேவை. இதை BSNL 5G நிச்சயம் வழங்கும் என்று நம்பப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.