பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்


சர்வதேச அல்லது அது நவீன சக்திகளால் தேசத்தை அழிக்கும் நோக்கில் பாடசாலையில் கற்கும் சிறுமிகளுக்கு ஐஸ் போதைப்பொருள் இலவசமாக வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

சமகால இலங்கை எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் ஒன்றாக பாடசாலை மாணவர்கள், குறிப்பாக பெண் பிள்ளைகள் அதிகளவில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சம்பவம் காணப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Shocking Information About School Students

சர்வதேச அல்லது அதிநவீன சக்திகளால் தேசத்தை அழிக்கும் நோக்கில் சிறுமிகளுக்கு  போதைப்பொருள் இலவசமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

சுதந்திரத்தின் பின்னர் எமது நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது, நெருக்கடிகளை சமாளிக்க பொருளாதார தீர்வொன்று இருக்க வேண்டும்.

பொருளாதார மீட்சி மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்றுதல் என்பன இன்று இலங்கை எதிர்கொள்ளும் இரண்டு முக்கியமான சவால்களாக மாறியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.