Rajinikanth: ரஜினி பிறந்தநாளில் மகள் கொடுத்த சர்ப்ரைஸ்: தீயாய் பரவும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘அண்ணாத்த’ படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ரஜினிகாந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் ‘ஜெயிலர்’ பட அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் ரஜினி கமிட் ஆனார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து ரஜினி படத்தை இயக்கவுள்ளார் நெல்சன்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால்சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இதன் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது.

இந்நிலையில் தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் போஸ்டர் ஒன்றை அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ‘லால்சலாம்’ படத்தின் போஸ்டரும் பேக்ரவுண்டில் உள்ள விஜய்யின் நிழலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

Legend Saravanan: சினிமாவை தொடர்ந்து அடுத்த இலக்கு: லெஜண்ட் அண்ணாச்சியின் அதிரடி முடிவு.!

மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பதிவில், ‘உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. நீங்கள் தினமும் கோடிக்கணக்கானவர்களை சந்தோஷப்படுத்துகிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர். சூப்பர் ஸ்டாரான என் அப்பாவும் எங்கள் ஒரே தலைவருமான நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என இதயபூர்வமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Varisu: ரஜினி, கமல் பாணியில் களமிறங்கிய விஜய்: மாஸ் காட்டும் ‘வாரிசு’ படக்குழு.!

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ‘ஜெயிலர்’ படக்குழுவினரும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு கிளிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.