“மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் “

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவர்களுக்கான “மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் ” தொடர்பான செயலமர்வு நேற்று (13) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை வழங்கும் நோக்கில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர் நிஷா ஹரீமின் ஏற்பாட்டில் இச் செயலமர்வு இடம்பெற்றது.

இச்செயலமர்வின் போது சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளல், மாணவத் தலைவர்கள் எவ்வாறான தமக்கான தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்ளல், நிலைபேறான தலைமைத்துவம், நிலைபேறான முகாமைத்துவம், சிறுவர் பாதுகாப்பு தினத்தினை பிரகடனப்படுத்தல் மற்றும் பாடசாலைகளின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான குழு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது.

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இத்திட்டமானது நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தேசிய ரீதியில் மாணவர் தூதுவர் தேசிய மாநாடு நடாத்தப்படவுள்ளமை,
ஜனாதிபதி ஆசிரியர் தூதுவர் விருது மற்றும் ஜனாதிபதி மாணவர் தூதுவர் விருது ஆகியன வழங்கப்படவுள்ளமை தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், தேசிய சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் லக்சிகா மணிக்வோவ (தகவல் மற்றும் ஊடகப்பிரிவு), தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் திட்டமிடல் பணிப்பாளர் சாணி காமலர்கொட, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடக அதிகாரி தனுஸ்க சேனாரத்ன, மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் ஆகியோர் பங்குபற்றினர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.