இந்த வெற்றிக்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது – கேப்டன் கே.எல்.ராகுல்

சாட்டிங்காம்,

இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடேயேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14 ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய அனி 404 ரன்னும், வங்காளதேச அணி 150 ரன்னும் குவித்தது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வங்காளதேச அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவ்ல் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

இன்று 5ம் நாள் தொடங்கிய 1 மணி நேரத்திலேயே மீதமுள்ள 4 விக்கெட்டுக்ளையும் இழந்த வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது,

நாங்கள் சிறிது காலமாக இங்கு இருக்கிறோம். ஒருநாள் தொடர் நாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இது மிகவும் கடினமான டெஸ்ட் போட்டி மற்றும் இந்த வெற்றிக்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. நாங்கள் அதை செய்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் மிகவும் எளிதாக பேட்டிங் செய்வது போல் இருந்தது. முதல் 3 நாட்கள் ரன்கள் குவிக்க மிகவும் கடுமையாக இருந்தது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் அருமையாக ஆடினர், நாங்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டியிருந்தது. நாங்கள் முதல் இன்னிங்சில் மிகவும் அருமையாக பேட்டிங் செய்தோம்.

புஜாரா, ஷ்ரேயஸ் ஆகியோர் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடினர். மேலும், பண்ட்டின் அதிரடி ஆட்டமும் சிறப்பாக இருந்தது. கில் மற்றும் புஜாரா அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்டனர். நாங்கள் பந்துவீசிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த பிட்ச்சில் பந்துவீச்சாளர்களுக்கு எந்த ஒரு உதவியும் இல்லை. ஆனாலும் அவர்கள் சிறப்பாக பந்துவீசினர்.

உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி எங்களை ஆட்டத்துக்குள் மறுபடியும் அழைத்து வந்தார். இந்த தாக்குதலுக்காக நாங்கள் பல ஆண்டுகள் உழைத்துள்ளோம். அவர்களின் தரத்தை அவர்கள் காட்டினர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.