எலன் மஸ்கிற்கு அதிர்ச்சி தந்த டுவிட்டர் பயனாளர்கள்| Dinamalar

வாஷிங்டன்:’டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என பயனாளர்களிடம் கருத்துக்கணிப்பை நடத்திய எலன் மஸ்கிற்கு, பயனாளர்கள் அதிர்ச்சியை பரிசாக கொடுத்துள்ளனர். தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும்படி, 57 சதவீதம் பேர் அவரை வலியுறுத்தி உள்ளனர்.

‘டெஸ்லா’ நிறுவனத் தலைவரான எலன் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் பங்குகளை அதிகளவில் பெற்று அதன் உரிமையாளரானார்.

இதைத் தொடர்ந்து டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற மஸ்க், நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து தன் டுவிட்டர் பக்கத்தில், தலைமைப் பொறுப்பில் நீண்ட காலம் தொடர விரும்பவில்லை என்றும், இந்த பொறுப்பிற்கு வேறு ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஒரு கருத்துக்கணிப்பையும் அவர் துவக்கி உள்ளார்.

அதில், ‘தலைமை நிர்வாக பொறுப்பிலிருந்து நான் விலகலாமா’ என்ற ஒரு கேள்வியை கேட்டுள்ளார். கருத்துக்கணிப்பின் முடிவை ஏற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கருத்துக்கணிப்பில் இதுவரை 57.6 சதவீதம் பேர், தலைமைப் பொறுப்பிலிருந்து மஸ்க் விகலாம் என்றும், 42 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் மஸ்க் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.