Whatsapp ban: 37 லட்சம் Whatsapp கணக்குகளை தடை செய்த Meta!

Meta நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான Whatsapp கடந்த நவம்பர் மாதம் 37 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது. இது நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை நடந்துள்ளது. இதே நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 23.24 லட்சம் கணக்குகளை முடக்கியது.

இது October மாத கணக்குகளை ஒப்பீடு செய்தால் 60% அதிகம் ஆகும். இதில் உள்ள 10 லட்சம் கணக்குகள் என்பது மற்றவர்களின் புகார் காரணமாக தூக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளால் பயனர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று Whatsapp தெரிவித்துள்ளது.

இந்த புகார் என்பது மூன்று கட்டங்களாக வேலை செய்கிறது. முதலில் ஆபாச வேளைகளில் ஈடுபடும் கணக்குகளை பதிவு செய்வது. அடுத்ததாக அவர்களுடைய மெசேஜ் விவரங்கள் சேகரிப்பது, மூன்றாவது அந்த விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்து உண்மையில் அவர்களை தடை செய்யவேண்டுமா என்று முடிவு செய்து பின்னர் தடை செய்வது.

நவம்பர் மாதம் மட்டும் சுமார் 964 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் இதுவரை 830 பேர் தடை செய்யப்பட்டுள்ளனர். இதற்காகவே AI தொழில்நுட்பத்தில் Meta நிறுவனம் பெரும் அளவு முதலீடு செய்துள்ளதாகவும் அதை வைத்து இந்த முடிவுகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதைத்தவிர இதற்கென தனியாக குழு ஒன்றை அமைத்து பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாகவும் Whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்கள் பலர் பொய் கணக்குகள் மூலம் தினமும் ஏமாற்றப்பட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டப்படுகிறார்கள்.

இது Whatsapp செயலியின் வரைவு அடிப்படையில் தவறு ஆகும். இதற்காகவே Report ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலியான கணக்குகளை நாம் புகார் தெரிவித்தால் Whatsapp அவற்றை சரிபார்த்து பின்னர் தடை செய்துவிடும். இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு வளர்ச்சி அடைந்த பின்னர் இதுபோன்ற போலியான ஏமாற்று வேலைகள் பல நடைபெறுகின்றன. அவற்றில் இருந்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.