டிசம்பர் 23 முதல்… அவசர ஆபரேஷனுக்கு ரெடியாகும் இந்தியா… இது கொரோனா அலர்ட்!

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்ற பேச்சு சத்தமாக ஒலிக்க தொடங்கியுள்ளது. முதலில் கொரோனா, அப்புறம் ஒமிக்ரான், அதன்பிறகு உருமாறிய பல்வேறு வகையான வைரஸ்கள் என ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சீனா, கொரியா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தெற்காசியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.

அஞ்சும் உலக நாடுகள்தற்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளில் 81 சதவீதம் வெறும் 10 நாடுகளில் தான் இருக்கின்றன. அதில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. இதற்கு போதிய அளவில் தடுப்பூசி செலுத்தாதது, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுவது, கட்டுப்பாடுகளை திடீரென ரத்து செய்தது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகின்றன.
விடுமுறை நாட்கள்எனவே இந்தியாவில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தற்போது கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு என விடுமுறை நாட்களை நோக்கி மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனால் பொது இடங்களில் அதிகம் கூடும் வகையிலான நிகழ்வுகள் அரங்கேறக் கூடும். இது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்.
பரவும் உருமாறிய கொரோனா… நாம் பயப்பட வேண்டிய அவசியம் இருக்கிறதா?
மீண்டும் கட்டுப்பாடுகள்
அவசர ஒத்திகைஎனவே உரிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதும், அவற்றை பின்பற்றுவதும் அவசியமாகிறது. இந்த விஷயத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசர ஒத்திகைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
ரெடியாகும் மருத்துவமனைகள்கொரோனா நெருக்கடி காலத்தில் எவ்வாறு தயாராக வேண்டுமோ? எத்தகைய மருத்துவ வசதிகள் இருக்க வேண்டுமோ? செயல்பாடுகளில் எந்த அளவிற்கு வேகம் காட்ட வேண்டுமோ? அவை அனைத்தும் சோதனை முயற்சியில் செய்து பார்க்க போகின்றனர். இதுதொடர்பாக சுற்றறிக்கை அனைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேரில் செல்லும் அமைச்சர்வரும் 27ஆம் தேதி அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவசர ஒத்திகை நிகழ்வை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
மூக்கின் வழியே கொரோனா தடுப்பு மருந்து – மத்திய அரசு ஒப்புதல்..!
இந்தியாவில் கள நிலவரம்
மூக்கு வழியாக தடுப்பூசிஇதுதொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பூஸ்டர் டோஸ்பூஸ்டர் டோஸாக இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தலாம். இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும். ஏற்கனவே கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசிகளை இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள், அடுத்தகட்டமாக மூக்கு வழியாக செலுத்தப்படும் பூஸ்டர் டோஸை போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.