சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஸீரோ அல்ட்ரா போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் இன்பினிக்ஸ் ஸீரோ அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இதுவரை பட்ஜெட் ரகத்தில் போன்களை அதிகம் விற்பனை செய்து வந்த இந்நிறுவனம் ப்ரீமியம் ரகமாக இந்த போனை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.8 இன்ச் முழு ஹெச்.டி+ 3டி கர்வ்டு டிஸ்பிளே
- மீடியாடெக் டிமன்சிட்டி 920 சிப்செட்
- 13ஜிபி ரேம்
- 256ஜிபி ஸ்டோரேஜ்
- 200 + 13 + 2 மெகாபிக்சல் பின்புற கேமரா
- 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- 4500mAh பேட்டரி
- 180 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- 5ஜி சப்போர்டும் உள்ளது
- இந்த போனின் விலை ரூ.29,999
Time to live life, just a little bit ULTRA!
The incredible Infinix ZERO Ultra with India’s 1st 180W Thunder Charge is available now on @flipkart
Get it at a special launch price here: https://t.co/me027jGRJU pic.twitter.com/8xhkKiWecN
— Infinix India (@InfinixIndia) December 25, 2022