கோயில்கள் மாணவர்களை அதிகாலையில் எழுப்பி விட வேண்டும்; ஹரியானா அரசு அறிவுறுத்தல்.!

பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை மேம்படுத்தும் நோக்கில், ஹரியானா அரசு, கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் மூலம், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை, அடுத்த ஆண்டு மார்ச்சில் நடத்தப்படும் வாரியத் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில், சீக்கிரம் எழுப்புவதற்கான அறிவிப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதிகாலை 4.30 மணிக்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எழுப்பி தயார்படுத்திக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகளை மாநில கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குத் தகவல் அனுப்பியதில், மாணவர்கள் சுயமாகப் படிக்க கூடுதல் நேரம் கிடைக்கும் வகையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டுத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை வலியுறுத்தியது.

இதற்கு, காலை நேரம் மிகவும் பொருத்தமானது. அந்த நேரத்தில், மனம் புத்துணர்வுடன் இருக்கும், வாகனங்களின் இரைச்சல் இருக்காது. இதற்காக, ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும், தங்கள் குழந்தைகளை அதிகாலை 4:30 மணிக்கு எழுப்பி, 5:15 மணிக்குள் படிக்க வைக்கும்படி பெற்றோரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும் மாணவர்கள் எழுந்து படிக்கிறார்களா இல்லையா என்பதை வாட்ஸ்அப் குரூப் மூலம் ஆசிரியர்கள் விசாரிப்பார்கள். பெற்றோர் ஒத்துழைக்கவில்லை என்றால், பள்ளி நிர்வாகக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து உறுப்பினர்களும் தங்கள் கிராமங்களில் அதிகாலையில் படிக்கும் சூழல் இருப்பதை உறுதி செய்யுமாறு கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களை அணுகி அதிகாலை அறிவிப்புகளுக்கு (ஒலிப்பெருக்கிகள் மூலம்) மாணவர்கள் எழுந்து படிக்கத் தொடங்க வேண்டும். இதன் மூலம், ஒவ்வொரு மாணவருக்கும் கூடுதலாக இரண்டு முதல் மூன்று மணி நேரம் (படிப்பு) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என அனைத்து அரசு பள்ளி முதல்வர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மேல்நிலை கல்வித்துறை இயக்குனர் அன்ஷாஜ் சிங் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்வுக்குத் தயார்படுத்துவதற்கான சரியான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது, முழு சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும். குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் சமூகங்கள் மட்டுமே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கின்றன என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சாமானியருக்கு துல்லிய கணக்கு… கார்ப்பரேட்டுகளுக்கு கணக்கே இல்லை – சு.வெங்கடேசன் காட்டம்!

டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பள்ளித் தேர்வுகளுக்கு இன்னும் 70 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை நினைவுபடுத்தியதுடன், வாரியத் தேர்வு முடிவுகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்குமாறும் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.