1.5 டன் தக்காளியில் கிறிஸ்துமஸ் தாத்தா; ஒடிசா கடற்கரையில் பிரம்மாண்டம்.!

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும், இந்த திருவிழா, நாடு முழுவதும் தேவாலயங்கள் வண்ண விளக்குகளா கலைக்கட்ட தொடங்கியுள்ளது.

கிறிஸ்துவ மக்கள் ஒரு மாதமாக கடுமையாக விரதம் மேற்கொண்டு கிறிஸ்மஸ் விழாவை வரவேற்க தொடங்கி காத்திருந்த நிலையில், கிறிஸ்துமஸ் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இந்த பிரார்த்தனையில், உறவினர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்தநிலையில் ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், 1.5 டன் தக்காளிகளைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தாவை வடிவமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவில் உள்ள கோலாப்பூர் கடற்கரையில் 1500 கிலோ தக்காளியைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தாவை உருவத்தை மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். அந்த சிற்பம் 27 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்டது.

பட்நாயக்கின் மாணவர்கள் சிற்பத்தை முடிக்க அவருக்கு உதவியுள்ளனர். 1.5 டன் தக்காளிகளை கொண்டு, வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட மணற்சிற்பத்தை டுவிட்டரில் பகிர்ந்த பட்டநாயக், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எந்தவொரு கொண்டாட்டம் மற்றும் சிறப்பான தினங்களில் சம்பந்தபட்டவர்களில் சிற்பத்தை மணலில் வடிவமைப்பதில் சுதர்சன் பட்நாயக் வல்லவர். இந்தியாவின் மிகச் சிறந்த மணல் சிற்ப கலைஞர் ஆவார். ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பிறந்த சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையை சுதர்சன் பட்நாயக் கடற்கரை என்று சொல்லும் அளவுக்கு மாற்றி விட்டார் என்று சொன்னால் அது மிகையல்ல.

ராகுல் காந்தி பாதயாத்திரை 9 நாட்கள் நிறுத்தம்.!

நாட்டில் எந்தவொரு விசேஷ நாட்களிலும், சோக நாட்களிலும் சுதர்சன் பட்நாயக் கைவண்ணம் மிளிரும். மணல் சிற்பத்துக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்று இருக்கிறார் சுதர்சன் பட்நாயக். இது தவிர மணல் சிற்பத்தில் கின்னஸ் சாதனை, லிம்கா சாதனை என பல்வேறு சாதனை, விருதுகளை தன்வசம் வைத்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.