வாரிசு அரசியலை ஒழிக்க பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்: ஜெ.பி நாட்டா

இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் திமுக கட்சி என்பது கலைஞர் மற்றும் அவரது குடும்பம் அதேபோல காங்கிரஸ் என்பது காந்தி அவரது குடும்பம் அவரைத் தாண்டி யாரும் அரசியலில் தலைவர்களாக வருவதில்லை என ஜே பி நட்டா விமர்சித்துள்ளார். 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கோவை மாவட்டம் அன்னூர்- மேட்டுப்பாளையம் ரோடு தென்திருப்பதி நால் ரோடு சந்திப்பில் உள்ள மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று பேசினார். முன்னதாக அவருடைய பேச்சை தமிழில் சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மொழிப்பெயர்த்தார். அதில் திமுக ஒரு குடும்ப கட்சி கலைஞருக்கு பிறகு அவர் பேரன் ஆட்சிக்கு வந்து விட்டார். திமுக என்பது கட்டப்பஞ்சாயத்து பணத்தை கொள்ளை அடிப்பதிலேயே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. குடும்பத்திற்காக பணம் சேர்ப்பதில் முன்னிலையில் இருந்து பின்னர் கட்சியை அடுத்த கட்டமாக தான் வைத்திருக்கிறார்கள் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், பிரிவினை அரசியல் செய்யும் கட்சி காங்கிரஸ் தனித்தமிழ்நாடு கேட்கும் நபர்கள் ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பங்கு பெற்றுள்ளார்கள். விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு கொடுத்து வருகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் விவசாய நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா பயம் இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி மற்ற நாடுகளுக்கும் தடுப்பு ஊசியை ஏற்றுமதி செய்தது இந்தியா. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு எண்ணற்ற உதவிகளை கொடுத்து மருத்துவர்களை உருவாக்கியது. மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து அவர்களையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு அரசுக்கு முடிவுகாட்ட அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மகளிா் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சி பி ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் அண்ணாமலை, விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட பாஜகவினர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.