இந்தியா- இலங்கை  முதலாவது T20 கிரிக்கெட் போட்டி மூன்றாம் திகதி ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20 மற்றும் 3 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தியா- இலங்கை  அணிகளுக்கிடையிலான  முதலாவது T20 போட்டி எதிர்வரும் மூன்றாம் திகதி இந்தியாவின் மும்பை வான்கடே மைதானத்தில் .நடைபெறவுள்ளது.

இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி வீரர்களின் விபரம் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இதில் T20 போட்டிக்கான இந்திய அணியில் தலைவர் ரோகித் சர்மா, முன்னாள் தலைவர் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

சகலத்துறை விளையாட்டு வீரர் ஹர்திக் பாண்ட்யா அணித்தலைவராகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணைதலைவராகவும்  நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்த அணியில் இந்திய அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வங்காள்தேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் சிறப்பாக செயல்படவில்லை.

இலங்கை தொடருக்கான இந்திய T20 அணி: 
ஹர்திக் பாண்ட்யா ((தலைவர்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (துணைத் தலைவர்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ்குமார். 
இந்திய ஒரு நாள் போட்டி அணி:
 
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப்சிங்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.