துவம்சம் செய்யும் பனி சூறாவளி: உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி| US Blizzard: Niagara Falls Turn Into Icy, Winter Wonderland

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க்: அமெரிக்காவை நான்கு நாட்களாக துவம்சம் செய்து வரும் பனி சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டியது. நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் பனியில் உறைந்து போய் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனி சூறாவளி வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது.

போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டி உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பலர் வாகனங்களிலேயே சிக்கி உயிரிழந்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

latest tamil news

இந்நிலையில், இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது. சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.