பிரிட்டன் ,பிரான்ஸ் நடுகளுக்கு பனங்கள் ஏற்றுமதி

ஒரு தொகை பனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புக்கள் பிரான்ஸுக்கு அண்மையில்; அனுப்பப்பட்டதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த ஏற்றுமதி மூலம்  45,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டிசம்பர் மாதம் 14 அம் திகதி பிரிட்டனுக்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகை பனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புக்கள் ஏற்றுமதி மூலம் 6,300 அமெரிக்க டோலர் வருமானம் பெறப்பட்டதாக தெரிவித்த அவர் ,இது போன்று மேலும் பல நாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

பனை அபிவிருத்தி சபை மற்றும் பனை ஆய்வு நிறுவனத்தின் கீழ் பனை அபிவிருத்தி சபையில் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள்  மூலம் இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் உள்ள விநியோக முகவர் நிறுவனம் ,லண்டனில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கால பகுதியில் பர்னட்  (Barnet) என்ற பிரதேசத்தில் விற்பனை ஊக்குவிப்பு திட்ட நடவடிக்கையை முன்னெடுத்தது என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.