நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு மர்மநபர் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரின் மகால் பகுதியில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று மர்ம நபர் ஒருவர் ெசல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார். குண்டு வைத்து அலுவலகத்தை தகர்த்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க செய்யும் குழு மற்றும் மோப்ப நாய் உடனான குழுவினர் அங்கு விரைந்தனர். அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு மற்றும் வெடிப்பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.