Earthquake in Delhi : புத்தாண்டின் முதல் நாளில் டெல்லியில் நிலநடுக்கம் ; 2023-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்

Earthquake in Delhi : தலைநகர் டெல்லியில் புத்தாண்டின் முதலான காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.  டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் காயம் அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. ” ஜன. 1, 2023 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 3.8 ஆகும். இது அதிகாலை 1 மணியளவில் உணரப்பட்டுள்ளது. ஹரியானாவின் ஜஜ்ஜார் நகரில் இருந்து வடக்கு-வடமேற்கு திசையில் 11 கி.மீ., நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

2023 : பெயரே கேட்டாலே சும்மா அதிருதுல்ல

இதேபோன்ற நவம்பர் 9, 12 ஆகிய தேதிகளில் டெல்லியிலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த நவ. 9 அன்று நள்ளிரவு 2 மணியளவில், டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அப்போது நேபாளத்தை மையம் கொண்டு நிலநடுக்கம் நிகழந்தது. தொடர்ந்து, கடந்த நவ. 12 அன்று டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் இரவு 8 மணிக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமும், நேபாளத்தை மையம் கொண்டு நிகழ்ந்தது. நவ. 12ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், 5.4 ரிக்டர் அளவில் நிகழ்ந்ததாக கூறப்பட்டது. தற்போது, புத்தாண்டின் தொடக்கத்திலேயே டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.