லண்டனில் மாயமான இளம்பெண் வழக்கில் திருப்பம்! 54 வயது நபர் கைது.. முழு பின்னணி


லண்டனில் பெண்ணொருவர் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக கொலை வழக்காக மாற்றி பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மாயமான இளம்பெண்

Maureen Gitau (24) என்ற இளம்பெண் கடந்த மாதம் 10ஆம் திகதி Lewishamல் இருந்து காணாமல் போனார்.
அவரை பொலிசார் தொடர்ந்து தேடியும் கிடைக்காத நிலையில் Maureen கொல்லப்பட்டிருப்பார் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து Maureen-க்கு நன்கு தெரிந்த 54 வயதான நபரை சந்தேகத்தின் பேரில் இரு தினங்களுக்கு முன்னர் காவல்துறை கைது செய்துள்ளது.
Det Ch Insp கேட் ப்ளாக்ப்ர்ன் கூறுகையில், இவ்வழக்கு தற்போது கொலை விசாரணையாகக் கருதப்படுவதால் இந்த கைது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

லண்டனில் மாயமான இளம்பெண் வழக்கில் திருப்பம்! 54 வயது நபர் கைது.. முழு பின்னணி | London Women Missing Murder Investigation

MET POLICE

உடலை கண்டுபிடிக்கவில்லை

Maureen உடலை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு எங்களுக்கு காரணம் இருக்கிறது.

Maureen குடும்பத்தாரிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு அதிகாரிகள் தேவையான ஆதரவை வழங்குகின்றனர்.
Maureen தொடர்பாக எந்தவொரு தகவல் தெரிந்தாலும் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.