விவாகரத்து முடிவில் ஷங்கர் மகள்…என்ன ஆச்சு?

தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை கொடுத்து இந்திய சினிமாவையே வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குனர் ஷங்கர். இவருக்கு அதிதி மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இரு மகள்கள் உண்டு. இதில் இளைய மகள் அதிதி சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் நடித்த விருமன் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் அதிதி.

அதேபோல் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா பக்கமே தலைகாட்டவில்லை. அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால் மகளின் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்தார் ஷங்கர். கிரிக்கெட் வீரரும், தொழிலதிபரின் மகனுமான ரோஹித் என்பவரை தான் ஐஸ்வர்யா திருமணம் செய்துகொண்டார். 

இதனிடையே சமீபத்தில் ரோஹித்தின் தந்தை வைத்திருந்த கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி பெற வந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு அங்குள்ள பயிற்சியாளரான தாமரைக்கண்ணன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து கிளப் நிர்வாகத்திடம் புகாரளித்தும் சம்மந்தப்பட்ட பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்காததால், அடுத்தகட்டமாக இந்த விவகாரம் போலீஸிடம் சென்றது. அத்துடன் இந்த வழக்கில் ஷங்கரின் மருமகனும் சிக்கியதால் இந்த விவகாரம் பூதாகரமானது. மேலும் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சமீபத்தில் ஷங்கர் தனது குடும்பத்துடன் நியூ இயர் கொண்டாட்டியுள்ளார். அதில் ஷங்கரின் மனைவி, மகன், இளைய மகள் அதிதியும் இருந்தனர். மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோகளை ஷேர் செய்த அவர், தனது அக்காவை மிஸ் செய்வதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் அதிதி. ஆனால் அக்கா கணவர் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மேலும் அதிதி வெளியிட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில் ஐஸ்வர்யா இந்த கொண்டாட்டத்தில் இல்லாததால், பலரும் அவர் கணவர் மீதான வழக்கால் அப்செட்டில் உள்ளதாகவும், கூடிய விரைவில் விவாகரத்து குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.