பிரான்ஸ் பள்ளியில் ஓரினச்சேர்க்கை கொடுமையால் 13 வயது சிறுவன் தற்கொலை


பிரான்ஸ் பள்ளியில் கொடுமைக்கு ஆளான 13 வயது ஓரினச்சேர்க்கை சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

பிரான்சின் வோஸ்ஜஸ் பகுதியில் ஓரினசேர்கையாளரான 13 வயது சிறுவன் லூகாஸ், கடந்த வார இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மைனர் ஒருவர் துன்புறுத்தப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

லுகாஸ், அவனது ஓரினச்சேர்க்கை தன்மை காரணமாக பல மாதங்களாக அவரது பள்ளியில் மாணவர்களால் கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாகியதாக, அவனது நண்பர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

பிரான்ஸ் பள்ளியில் ஓரினச்சேர்க்கை கொடுமையால் 13 வயது சிறுவன் தற்கொலை | France Shocks Boy Suicide Homophobic BullyingRepresentative Image: Shutterstock

சிறுவனின் குடும்பம் இன்னும் குற்றவியல் புகாரை பதிவு செய்யவில்லை, ஆனால் இந்த சம்பவம் காரணமாக கோல்பே நகரில் உள்ள லூயிஸ் அர்மண்ட் பள்ளியின் தற்போதையை நிலைமை குறித்து கல்வி அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூகாஸை போன்று கொடுமைப்படுத்தப்பட்ட அனைத்து மாணவர்களையும் நினைத்துப் பார்ப்பதாகவும், கவலை தெறிவிப்பதாகவும் பிரான்சின் கல்வி அமைச்சர் பாப் என்டியாயே ட்விட்டரில் கூறியுள்ளார்.

இறுதிச் சடங்கு எபினல் நகரில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஸ்டாப் ஹோமோபோபி பாகுபாடு எதிர்ப்பு தொண்டு நிறுவனம், அவரது பெற்றோர் துக்கம் அனுசரிப்பவர்களை ஒற்றுமையுடன் LGBTQ அடையாளங்களைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்வதாகக் கூறியது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.