ஜேர்மனியில் குப்பைத்தொட்டியிலிருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதை அனுமதிக்க சட்டம்: ஒரு பயங்கர செய்தி


ஜேர்மனியில், மாணவர்கள் உட்பட சிலர் குப்பைத்தொட்டிகளில் இருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதைக் குறித்த மறைமுக செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் படிப்புக்காக பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக மாணவர்கள் செய்யும் செயல்

ஜேர்மனியில், தங்கள் படிப்புக்காக பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக மாணவர்களும், வறுமையிலிருக்கும் சிலரும் குப்பைத்தொட்டிகளில் இருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதாகக் கூறுகிறது ஒரு செய்தி.

அதாவது, ஜேர்மனியில் குப்பைத்தொட்டியிலிருந்து உணவை எடுத்துக்கொள்வதை அனுமதிக்க சட்டம் கொண்டுவருவதற்காக சில அமைச்சர்கள் முயற்சி செய்வதாக அந்த செய்தி கூறுகிறது.

ஆக, தங்கள் படிப்புக்காக பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக மாணவர்களும், வறுமையிலிருக்கும் சிலரும் குப்பைத்தொட்டிகளில் இருந்து உணவை எடுத்து பயன்படுத்துகிறார்களாம். ஆனால், அது சட்டப்படி குற்றமாம். ஆகவே, அதை குற்றம் இல்லை, சட்டப்படி குப்பைத்தொட்டியிலிருந்து உணவை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்குவதற்காக சில அமைச்சர்கள் முயற்சி செய்கிறார்களாம்.

ஜேர்மனியில் குப்பைத்தொட்டியிலிருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதை அனுமதிக்க சட்டம்: ஒரு பயங்கர செய்தி | Germany Set To Legalize Dumpster Diving

உலகம் முழுவதும் வீணாக்கப்படும் உணவின் அளவு

உலகம் முழுவதும் 1.4 ட்ரில்லியன் பெட்டிகள் நிறைய சேமியா அளவிலான உணவுப்பொருட்கள், 6.3 ட்ரில்லியன் ஆப்பிள்கள் அளவிலான பழங்கள், 75 மில்லியன் பசுக்கள் அளவிலான மாமிசம் மற்றும் 11 பில்லியன் சால்மன் மீன்கள் அளவிலான கடல் உணவு ஆகியவை வீணாக்கப்படுகிறதாம்.

ஆகவே, ஜேர்மனியில் இப்படி வீணாகும் உணவை மக்கள் எடுத்துக்கொள்வதை சட்டப்படி அனுமதிக்க ஜேர்மன் அமைச்சர்கள் சிலர் முயன்றுவருகிறார்கள்.

ஆனால், பல்பொருள் அங்காடிகளில், பிரச்சினைகள் உள்ள, அதாவது பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் விற்பனை செய்யப்பட முடியாத உணவுப்பொருட்களும், குப்பைத் தொட்டியைத்தான் சென்றடைகின்றன. எனவே, அவற்றை எடுத்து உண்பவர்களுக்கு அபாயம் ஏற்படலாம் என்ற கருத்தும் ஒரு பக்கம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
 

ஜேர்மனியில் குப்பைத்தொட்டியிலிருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதை அனுமதிக்க சட்டம்: ஒரு பயங்கர செய்தி | Germany Set To Legalize Dumpster Diving

Image: Volker Witting/DW 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.