பிரெஞ்சு ஆல்பஸ் மலையில் பனிச்சரிவு: பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்


பிரெஞ்சு ஆல்பஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் சிக்கி பிரித்தானிய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரித்தானிய பெண் உயிரிழப்பு

 45 வயதான பிரித்தானிய பெண்மணி ஒருவர் மேலும் இருவருடன் மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான மலையான மான்ட் பிளாங்கில் உள்ள அர்ஜென்டியர் பனிப்பாறையில் நடைபயணம் மேற்கொண்ட போது சனிக்கிழமை திடீரென பனிச்சரிவு விபத்து ஏற்பட்டது.

வழிகாட்டி ஒருவர் மூலம் மாலை 5 மணியளவில் சாமோனிக்ஸில்(Chamonix) உள்ள ஒரு சிறப்பு உயர் மலைத் தேடல் மற்றும் மீட்புப் பிரிவுக்கு பனிச்சரிவு விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

பிரெஞ்சு ஆல்பஸ் மலையில் பனிச்சரிவு: பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் | Avalanche In French Alps 1 British Woman DiesSky News 

இதையடுத்து விபத்து பகுதியில் இருந்து பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார், ஆனால் மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும் அந்தப் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என்று மலை மீட்பு பிரிவைச் சேர்ந்த கர்னல் பெர்ட்ராண்ட் ஹோஸ்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்த தகவலில், நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது, ஆனால் அவள் மோசமான நிலையில் இருந்தாள், நாங்கள் அவளை பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற்றினோம், இருப்பினும் எங்களால் அவளை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் Mont Blanc மாசிஃபில் இறப்புகள் அரிதானவை அல்ல, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 பேர் தங்கள் உயிரை இழக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


பனிச்சரிவு எச்சரிக்கை

விபத்து ஏற்பட்ட சனிக்கிழமையன்று பனிச்சரிவு எச்சரிக்கை மூன்று – ஐந்து என்ற அளவில் இருந்ததாக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரெஞ்சு ஆல்பஸ் மலையில் பனிச்சரிவு: பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் | Avalanche In French Alps 1 British Woman DiesGetty Images

அந்தப் பெண்ணும் அவரது கூட்டாளியும் ஒரு உயரமான மலை வழிகாட்டியுடன் இருந்ததாகவும், பனிச்சரிவு ஏற்பட்டபோது கோல் டு டூர் நொயரில் சென்று கொண்டிருந்ததாகவும், உள்ளூர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் வழங்கிய தகவலில், பிரான்சில் இறந்த பிரிட்டன் பெண்ணின் குடும்பத்திற்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.