பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அதிபர் ரணில் யோசனை| Sri Lankan President Ranils idea to overcome the economic crisis

கொழும்பு: ”பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின்ஆதரவை பெறுவதேநல்லது” என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனைநடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதால் நாட்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கை சரிந்து விட்டது. பணவீக்கம்அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் செலவு உயர்ந்து வாழ்க்கை முறையே மாறியுள்ளது. தற்போதைய சூழலில் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் குறித்து பேசுவது பயனற்றது.

எனவே சர்வதேச நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மட்டுமே இதற்கான தீர்வு. இல்லையென்றால் மேலும் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர்கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.