12 லட்சம் ரூபாய் Crypto பணத்தை திருடிய ஹாக்கர்கள்! மக்களே உஷார்!

உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ பணம் பெரிய அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த கிரிப்டோ பண முதலீடு தொடர்பாக பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு மக்கள் பலர் முதலீடு செய்கின்றனர்.

ஆனால் இதில் சமீபத்தில் FTX என்ற நிறுவனத்தில் பெரிய அளவு மோசடி நடந்து உலகம் முழுவதும் பெரிய அளவு சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால் பல நாட்டின் அரசுகள் கிரிப்டோ முதலீட்டில் மிகவும் கவனமுடன் இருக்க மக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த கிரிப்டோ தொடர்பாக மக்களுக்கு பெரிய அளவு சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவிலும் சமீபத்தில் கிரிப்டோ மோசடி ஒன்று நடந்துள்ளது. கடந்த நவம்பர் 1, 2022 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே நகரில் உள்ள ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் ஒருவர் தன்னுடைய கிரிப்டோ பணம் திருடப்பட்டுள்ளது என்று புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் யாரோ தன்னுடைய கிரிப்டோ கணக்கை ஹாக் செய்து அதில் இருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரிப்டோ பணத்தை திருடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த கிரிப்டோ முதலீடு மக்கள் மத்தியில் அதிகரித்த ஒரு ஆண்டு ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு 20.1 பில்லியன் டாலர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதன் பிறகு திடீரென்று சந்தையில் சரிவு ஏற்பட்டு பல கிரிப்டோ நிறுவனங்கள் மூடிவிட்டன.

இதுவரை உலகம் முழுவதும் சுமார் 7% கிரிப்டோ பணம் திருடப்பட்டு எங்கு உள்ளது என்றே தெரியவில்லை. இவை பண மோசடி, வைரஸ், தீவிரவாத செயல், ஆள் கடத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அரசுகள் தெரிவிக்கின்றன. இது உலகிற்கே மிகப்பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

உலகில் தற்போது டிஜிட்டல் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அதை சார்ந்து நடக்கும் மோசடிகளும் அதிகரித்துவிட்டன. குறிப்பாக இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவு டிஜிட்டல் பண மோசடி இந்தியாவில் பல இடங்களில் நடந்துள்ளது. இதேபோல டிஜிட்டல் பணத்தை திருட கணக்கில் இல்லாத அளவு ஹாக்கர்கள் முயற்சி செய்துள்ளனர்.

போலியான அலைபேசிகள்,SMS, இணையதள லிங்க் போன்றவை மூலம் மக்களிடம் பணம் மோசடி செய்யப்படுகிறது. இதனால் எப்போது அனாவசியமான வலைத்தளங்களுக்கு செல்வதையோ தெரியாத SMS லிங்க் அழுத்தவோ கூடாது. ஏன்னென்றால் இனி வரும் காலங்களில் டிஜிட்டல் பண மோசடி என்பது மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. இதனால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.