பிரித்தானிய ராணுவத்தை பலவீனப்படுத்தும்! சொந்த நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்த ஜெனரல்


உக்ரைனுக்கு பிரித்தானியா அனுப்பும் 14 சேலஞ்சர் டாங்கிகள் மற்றும் பீரங்கி துப்பாக்கிகள் போன்றவை பிரித்தானிய ராணுவத்தை தற்காலிகமாக பலவீனமாக்கும் என்று அந்த நாட்டின் உயர் ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ் எச்சரித்துள்ளார்.

சேலஞ்சர் டாங்கிகள்

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் 10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைனிய ஆயுதப் படையினர் மீட்டு எடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை வழங்கும் பிரித்தானியா உட்பட சுமார் 50 நாடுகளின் அமெரிக்கா தலைமையிலான குழு அதன் அடுத்த கூட்டத்தை ஜனவரி 20 அன்று நடத்த உள்ளது.

பிரித்தானிய ராணுவத்தை பலவீனப்படுத்தும்! சொந்த நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்த ஜெனரல் | Tank Donation Will Weaken British Army General SayBritish tanks in Oman on exercise

இதற்கிடையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி  ஜெலென்ஸ்கி இடையே சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சேலஞ்சர் 2 டாங்கிகள் மற்றும் கூடுதல் பீரங்கி அமைப்புகளை வழங்குவதன் மூலம் உக்ரைனுக்கு ஆதரவைத் தீவிரப்படுத்துவதற்கான பிரித்தானியாவின் லட்சியத்தை பிரதமர் ரிஷி சுனக் கோடிட்டுக் காட்டினார் .

இதன்மூலம் உக்ரைனுக்கு பிரித்தானியா 14 சேலஞ்சர் டாங்கிகள் மற்றும் பீரங்கி துப்பாக்கிகள் அனுப்பும் என்பது உறுதியாகியுள்ளது.

பிரித்தானிய ராணுவ ஜெனரல் எச்சரிக்கை

பிரித்தானியாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு நன்றி தெரிவித்து உக்ரைனின் தலைவர் ஜெலென்ஸ்கி ட்விட்டரில் நன்றி தெரிவித்து இருந்தார்.

பிரித்தானிய ராணுவத்தை பலவீனப்படுத்தும்! சொந்த நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்த ஜெனரல் | Tank Donation Will Weaken British Army General SayReuters 

இருப்பினும் பிரித்தானியாவின் உயர் ராணுவ ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ், இந்த நடவடிக்கைக்குப் பிறகு பிரிட்டிஷ் ராணுவம் தற்காலிகமாக பலவீனமடையும் என்று எச்சரித்துள்ளார்.

உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவை என்றும், அவற்றை நல்ல பயன்பாட்டுக்கு உக்ரைன் கொண்டு வரும் என்றும் கூறினார், மேலும் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை மற்ற நாடுகளையும் இதேபோன்ற சைகைகளை செய்ய ஊக்குவிக்கும்.

ஆனால் இந்த திறன்களை விட்டுக்கொடுப்பது ஒரு ராணுவமாக நம்மை தற்காலிகமாக பலவீனப்படுத்தும், அதை மறுப்பதற்கில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யாவின் தோல்வியை உறுதி செய்வது எங்களைப் பாதுகாப்பாக ஆக்குகிறது மற்றும் உலகின் மிக சக்திவாய்ந்த தற்காப்புக் கூட்டணியான நேட்டோவின் முன்னணி உறுப்பினராக, கூட்டுப் பாதுகாப்பு கொள்கையால் நாங்கள் பாதுகாக்கப்படுகிறோம்.” என்றும் ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.