சிறகடித்து பறக்க தயாராகும் சமந்தா! 'வொர்க் அவுட்' புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி

உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது பயிற்சியாளரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.

பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா, ‘மயோசைட்டிஸ்’ எனப்படும் அரியவகை தசை அழற்சி நோயால் சமீபத்தில் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதில் சமந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவின. அதுகுறித்து சமந்தாவே வேதனை தெரிவித்திருந்தார். குறிப்பாக தன்னுடைய அழகு போய்விட்டதாகவும், படுத்த படுக்கையாக பலவீனத்துடன் இருப்பதாகவும், உயிருக்கே ஆபத்தான நிலையில் இருக்கிறேன் என்றெல்லாம் செய்திகளை பரப்பிவிடுவதாக ஒரு பேட்டியில் சமந்தா வேதனை தெரிவித்து இருந்தார்.

ஒருபுறம் உடல்நலப் பிரச்சினை; மறுபுறம் வதந்திகள் என நாலாபுறமும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையிலும், நம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து நேர்மறையான பதிவுகளை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

image

அந்தவகையில் தன் மீதான விமர்சனங்களுக்கும் வதந்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அவ்வளவு கடினமாக இல்லை” என பதிவிட்டுள்ளார். இத்துடன், “என்னால் முடியும் என்றால், உங்களாலும் முடியும்” என அவர் ஹேஷ்டேக் போட்டுள்ளார். மேலும், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது பயிற்சியாளரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

image

‘யசோதா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘சாகுந்தலம்’. சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை சமந்தா, “வாழ்க்கையில் நான் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் சினிமாவை எவ்வளவு நேசிக்கிறேன், சினிமா என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறது என்பது மட்டும் என் வாழ்க்கையில் எந்த மாற்றமுமின்றி நிலையாக உள்ளது.

image

‘சாகுந்தலம்’ படத்தின் மூலம் எனக்கும் சினிமாவுக்குமான காதல் இன்னும் வளரும் என நினைக்கிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சாகுந்தலம் திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.