பாலியல் புகார் விவகாரம் குறித்து அவசரமாக கூடும் ஐ.ஓ.சி.

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் மீதான பாலியல் புகார் நடவடிக்கை  குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா தலைமையில் மலை 5.45 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தல் வழங்கப்பட்டது.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக நேற்று நள்ளிரவு வரை ஒன்றிய அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தகவல்கள் குறிக்கின்றனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கும், சில பயிற்சியாளர்களும் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு 10 மணியளவில் ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

தொடர்ந்து இன்று அதிகாலை 1.45 வரை பேச்சுவார்த்தை நடந்தும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை அமைச்சரின் வீட்டிற்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் வீராங்கனைகள் எதுவும் பேசவில்லை. அதனால் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘அமைச்சருடன் நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை; இன்று மீண்டும் அமைச்சரை சந்தித்து பேசவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ரவி தஹியா, சாக்ஷி மாலிக், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் ஆகியோர் கலந்து கொண்டனர் என்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.