நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு குறைந்து, 545 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, கடந்த ஒரு வாரமாக 565 காசாக இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று என்இசிசி நாமக்கல் மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ், முட்டை விலையில் மாற்றம் செய்துள்ளார். இதன்படி ஒரு முட்டை விலையில் 20 காசுகள் குறைத்து, 545 காசாக நிர்ணயம் செய்துள்ளார்.
தமிழகத்தில் தைப்பூசத்தையொட்டி முட்டை விற்பனை குறைய தொடங்கியுள்ளது. மேலும், மற்ற மண்டலங்களிலும் முட்டையின் விற்பனை குறைந்தது, அதனால் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்திலும், முட்டை விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.