அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய நகரங்களில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்: இந்திய சமூகத்தினர் கவலை


டெக்சாஸ் மற்றும் மெல்போர்னில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க மாநிலமான டெக்சாஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இருப்பினும், இந்த தாக்குதல்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினரிடையே கவலையைத் தூண்டியுள்ளன.

முதல் சம்பவம்

முதல் சம்பவம் ஜனவரி 11 அன்று டெக்சாஸின் பிரசோஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீ ஓம்கர்நாத் கோயிலில் நடந்துள்ளது.

தகவல்களின்படி, கோவிலில் கொள்ளையர்கள் நுழைந்து, வளாகத்தில் இருந்த சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றனர்.

கோயிலுக்குள் இருந்த பாதுகாப்பு கமெராக்களில் பதிவான வீடியோவின் படி, ஒருவர் சன்னதியைக் கடந்து நேராக நன்கொடைப் பெட்டிக்கு செல்வது தெரிந்தது. பின்னர் சந்தேக நபர் கோவிலின் தேரை தள்ளி கதவை உடைத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.

அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய நகரங்களில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்: இந்திய சமூகத்தினர் கவலை | Hindu Temples Texas Us Melbourne AustraliaGoogleMaps PC: Priyankar Adhikari

பிராசோஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஒரே இந்து கோவில் இதுவாகும். உள்ளூர் இந்துக்கள் வழிபடுவதற்கும், அமைதி மற்றும் சமூகத்தைக் காண்பதற்குமான இடமாகவும் இருக்கிறது.இந்நிலையில் இந்த சம்பவம் இந்திய சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலுக்குப் பின்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பூசாரியும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது சம்பவம்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள Carrum Downs நகரில் இருந்து ஸ்ரீ சிவா விஷ்ணு கோவில் இந்து விரோத கிராஃபிட்டி பெயிண்ட்களால் (வர்ணங்களால்) அழிக்கப்பட்டது. 

அவுஸ்திரேலியாவின் தமிழ் இந்து சமூகத்தால் கொண்டாடப்படும் மூன்று நாள் ‘தைப் பொங்கல்’ பண்டிகையின் போது கோவிலுக்கு பிரார்த்தனைக்காக வந்த பக்தர்கள் இந்த கொடூரமான செயலை முதலில் கவனித்து கவலையுற்றதாக உள்ளூர் ஊடங்களில் செய்திகள் வெளியாயின.

இந்த சம்பவத்திற்கு ஒரு வாரம் முன்னதாக, மில் பூங்காவில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோவிலும் இதேபோல் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டி பெயிண்ட்களால் சிதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான வுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார் மற்றும் மெல்போர்ன் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக வலியுறுத்தினார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.