சர்ச்சைக்குரிய திரைப்படங்களை மறு தணிக்கை செய்ய தனிக்குழு – இந்து துறவிகள் சார்பில் அறிவிப்பு

புதுடெல்லி: பாலிவுட்டின், ‘பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் தீபிகா படுகோனேவுடன் ஷாருக்கான் நடித்த பாடல் காட்சி சர்ச்சைக்குள்ளானது. இதில் காவிநிற உடையுடன் இடம்பெற்ற ஆபாச நடனக் காட்சியை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இதுபோல் இந்து மதத்திற்குஎதிராக திரைப்படங்களில் சர்ச்சைகாட்சிகள் இடம்பெறுவதாக அவ்வப்போது புகார் எழுகிறது.

இந்நிலையில் உ.பி.யின் பிரயாக்ராஜில் பல்வேறு மடங்களின்துறவிகள் சார்பிலான தர்மசபைகூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஜோதிஷ்வர் பீடத்தின் அதிபதி சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் நேற்று கூறியதாவது:

இந்து சனாதன தர்மம் மற்றும் இந்து கலாச்சாரத்திற்கு எதிராக வெளியாகும் எந்த மொழி திரைப் படத்தையும் தொலைக்காட்சி மற்றும் இணையதள தொடர் களையும் அனுமதிக்க மாட்டோம். ஆபாசக் காட்சிகளையும் பெண்களுக்கு எதிரான கலவரக் காட்சிகளையும் ஏற்க முடியாது. இதற்காக எங்கள் தர்மசபை கூடிஆலோசித்து சில வழி காட்டுதல்களை வெளியிடுகிறது.

இதன்படி, 9 பேர் கொண்ட தணிக்கைக் குழு அமைக்கப் படுகிறது. அனைத்து திரைப் படங்கள், தொடர்களை இக்குழு பார்த்தபின் அவை பொது மக்கள்பார்வைக்கு வெளியிடப்படும். இக்குழு மத்திய அரசின் தணிக்கைக் குழுவுக்கு உதவியாக இருக்கும். இந்தப் பிரச்சினையில் நாங்கள் நீதிமன்றம் செல்லவும்தயார். இவ்வாறு அவிமுக்தேஷ் வரானந்த் கூறினார்.

இந்த தர்ம சபையின் தணிக்கைக் குழுவுக்கு சங்கராச்சாரி யார் அவிமுக்தேஷ்வரானந்த் புரவலராகி உள்ளார். சுரேஷ் மான்சாண்டா தலைமையிலான இக்குழுவில் திரைப்பட நடிகர் மணிஷ் பாண்டே, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.என்.மிஸ்ரா, சுவாமி சக்ரபாணி, உ.பி. திரைப்பட வளர்ச்சி கவுன்சில் துணைத் தலைவர் தருண் ராட்டி, ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் அர்விந்த் சிங் பதோரியா, பிரீத்தி சுக்லா, டாக்டர் கார்கி பண்டிட், இந்திய தொல்பொருள் ஆய்வக முன்னாள் இயக்குநர் தரம்வீர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே தீபிகா படுகோனேவின் ‘பத்மாவத்’, தமிழ்ப்படஇயக்குநர் லீனா மணிமேகலையின் ‘காளி’ எனும் ஆவணப்படம் உள்ளிட்டவையும் சர்ச்சைக்கு உள்ளாயின. இதுபோன்ற தயாரிப்புகளை மறு தணிக்கை செய்ய துறவிகளால் அமைக்கப்பட்ட குழுவும் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் மத்திய அரசின் திரைப்படத் தணிக்கை குழு அனுமதியளிப்பதை இக்குழு மறு தணிக்கை செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.