சீட் பெல்ட் அணியவில்லை… பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த காவல் துறை!

வீடியோ எடுப்பதற்காக சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதித்து பிரிட்டன் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வடமேற்கு இங்கிலாந்தில் வாகனம் ஓட்டும்போது வீடியோ எடுக்க தனது சீட் பெல்ட்டை கழற்றியதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளார். அதே நேரத்தில், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் போலீஸ் படை வெள்ளிக்கிழமை கூறியது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 100 பிரிட்டிஷ் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம் என்று முன்னதாக போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றால், இந்த அபராதம் 500 பவுண்டுகளாக அதிகரிக்கப்படும். சில நேரங்களில் சரியான மருத்துவ காரணங்களுக்காக சீட் பெல்ட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

பிரதமர் ரிஷி சுனக் தனது சீட் பெல்ட்டை சிறிது நேரம் மட்டுமே கழற்றியதாகவும், எனினும் அவர் தவறு செய்ததை ஏற்றுக் கொள்வதாகவும் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில், காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றால் உடனடியாக £100 அபராதம் விதிக்கப்படுகிறது. பிரதமர் தனது சீட் பெல்ட்டைக் கழற்றி ஒரு சிறிய வீடியோவை எடுத்திருந்தார். அவர் தனது தவறை முழுமையாக ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்கிறார். அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பிரதமர் நம்புகிறார் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும் படிக்க | Helicopter Crash: உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து அமைச்சர்கள் குழந்தைகள் என 18 பேர் பலி

இங்கிலாந்தில், கார்கள், வேன்கள் மற்றும் பிற சரக்கு வாகனங்களில் பயணிக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட பயணிகள், சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் . மேலும் 14 வயதிற்குட்பட்ட பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருதை ஓட்டுனர்கள் உறுதிபடுத்த வேண்டும். காவல்துறை, தீயணைப்பு அல்லது பிற மீட்பு சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு விதி விலக்கு உண்டு.

குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் 

ரிஷி சுனக், நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நிதி வழங்க, லெவலிங் அப் நிதியை அறிவிப்பதற்காக இந்த வீடியோவை உருவாக்கினார். அந்த வீடியோவில், மோட்டார் சைக்கிளில் வந்த போலீசார், அவரது காரை சுற்றி வளைத்து விசாரிக்கின்றனர்.

பிரதமரை குறிவைத்து, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் செய்தி தொடர்பாளர், ரிஷி சுனக்கிற்கு சீட் பெல்ட் அணிவது, டெபிட் கார்டு பயன்படுத்துவது, ரயில் சேவை, இந்த நாட்டில் பொருளாதாரத்தை நிர்வகிக்க என எதுவும் தெரியாது என்று கூறினார். ஒவ்வொரு நாளும் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது, அதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், சில நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவில், சுனக் தனது அட்டை மூலம் பணம் செலுத்த சிரமப்படுவதைக் காண முடிந்தது என எதிர் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அலுவலகத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏலம் விடும் டிவிட்டர் நிறுவனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.