ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்த வேண்டாம்: உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவுரை


ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் பெரிய தாக்குதல்கள் நடத்துவதை அல்லது திட்டமிடுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


ராணுவ உதவி

உக்ரைன் ரஷ்யா இடையிலான ராணுவ தாக்குதல் நடவடிக்கையானது கிட்டத்தட்ட ஒரு வருடங்களை தொடவிருக்கும் நிலையில், ரஷ்ய படைகளின் அத்துமீறிய தாக்குதல்களை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையே நடந்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சேலஞ்சர் 2 டாங்கிகள் மற்றும் கூடுதல் பீரங்கி அமைப்புகள் உக்ரைனுக்கு வழங்கப்படுவதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்த வேண்டாம்: உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவுரை | The Us Wants Ukraine To Hold Off On A OffensiveAP: Gleb Garanich

அமெரிக்காவும் இந்த வார தொடக்கத்தில், 2.5 பில்லியன் டொலர் ஆயுதப் பொதியின் ஒற்றை பகுதியாக நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள் உக்ரைனுக்கு அனுப்புவதாக அறிவித்தது. 

தாக்குதல் நடத்த வேண்டாம்

இதற்கிடையில் ரஷ்ய படைகளுக்கு எதிராக பெரிய தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அமெரிக்க மூத்த அதிகாரிகள் உக்ரைனை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட உடன் தாக்குதல் நடத்துவது வெற்றிகரமாக இருக்கும் என்று அவர்கள் நம்புவதாக தெரியவந்துள்ளது.

ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்த வேண்டாம்: உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவுரை | The Us Wants Ukraine To Hold Off On A OffensiveAP

இது தொடர்பாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த பெயர் வெளியிடாத அதிகாரி பேசுகையில், உக்ரைனியர்கள் அமெரிக்கா வழங்கும் சமீபத்திய ஆயுதங்கள் குறித்த பயிற்சிக்கு முதலில் போதுமான நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்யும் சூழலில் இருப்பதாக கூறினார். 

அமெரிக்காவின் பல்வேறு இராணுவ உதவிகளுக்கு மத்தியில் எவ்வாறாயினும் அப்ராம்ஸ் டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பப் போவதில்லை, ஏனெனில் அவை விலை உயர்ந்தவை மற்றும் பராமரிப்பது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.