Budget 2023 Expectations: இந்த முறையில் 80C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்காது

பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 பிப்ரவரி 2023 அன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் மாத சம்பளதாரர்களுக்கும், சாமானியர்களுக்கும், பல துறைகளுக்குமான பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன், இதுவே மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், நாட்டு மக்களைக் கவர அரசாங்கம் பல வித நல்ல அறிவிப்புகளை வெளியிடக்கூடும். 

எனினும், இந்த பட்ஜெட்டில் சில குறிப்பிட்ட எதிர்பார்ப்புகள் பற்றி அதிகம் விவாதிக்கப்படுகின்றன. அவற்றில் வரி அடுக்கு, வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிப்பது ஆகியவை அடங்கும். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை வருமான வரி விலக்கு வரம்பை நிதியமைச்சர் நிச்சயம் உயர்த்துவார் என்று தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

80C இன் கீழ் விலக்கு அதிகரிக்க கோரிக்கை

இந்த முறை அரசாங்கம், வருமான வரி விலக்கு வரம்பை இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தக்கூடும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வரும் காலகட்டத்தில், வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிப்பதால், மக்களிடம் செலவழிக்கத்தக்க தொகை அதிகம் இருக்கும். 

ஸ்டாண்டர்ட் டிடக்ஷன், அதாவது நிலையான விலக்கு 50,000 இலிருந்து 75,000 ரூபாயாக அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 80C இன் கீழ் கிடைக்கும் முதலீட்டு வரம்பின் வரம்பை அதிகரிக்க வேண்டும் என சம்பள வர்க்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர பிபிஎப்பில் டெபாசிட் செய்யப்படும் பண வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனினும், கடந்த சில நாட்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, வரி செலுத்துவோருக்கு 80C இன் கீழ் கிடைக்கும் விலக்கு நிறுத்திவிட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

பழைய வரி முறையை விட அதிக வரி அடுக்கு

2020-21 பட்ஜெட்டில், பாரம்பரிய வரி முறையிலிருந்து வேறுபட்ட ஒரு மாற்று வருமான வரி முறை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது புதிய வரி முறை என்று அழைக்கப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய வரி விதிப்பு முறை குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதில், 7-10 வழிகளில் வரிவிலக்கு பெறலாம். ஆனால் புதிய வரி ஸ்லாப்பில் நீங்கள் எந்த விதமான விலக்கையும் கோர முடியாது. இந்த அமைப்பில், பழைய வரி முறையை விட அதிக வரி அடுக்குகள் உள்ளன.

2.5 லட்சம் வரை வருமான வரி இல்லை

புதிய வரி விதிப்பில் 2.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு உள்ளது. இதற்குப் பிறகு, வருமான வரியில் ஏழு வெவ்வேறு அடுக்குகள் உள்ளன. இதில், 80சி, 80டி, மருத்துவக் காப்பீடு, வீட்டுக் கடன் போன்றவற்றில் வரி விலக்கு கோர முடியாது. இதில், 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25 சதவீத வரியும், 15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும். 

இது தவிர, விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், பிபிஎஃப் வட்டி, காப்பீட்டு முதிர்வுத் தொகை, இறப்புக் கோரிக்கை, ஆட்குறைப்பு மூலம் பெறப்படும் இழப்பீடு, ஓய்வு பெறும்போது வரும் விடுப்புத் தொகை போன்றவற்றுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

புதிய வரி விதிப்பு
– 2.5 லட்சம் வரை வருமானம் – 0% வரி
– 2,50,001 முதல் 5 லட்சம் வரை வருமானம் – 5% வரி
– 5,00,001 முதல் 7.5 லட்சம் வரை வருமானம் – 10% வரி
– 7,50,001 முதல் 10 லட்சம் வரை வருமானம் – 15% வரி
– 10,00,001 முதல் 12.5 லட்சம் வரை வருமானம் – 20% வரி
– 12,50,001 முதல் 15 லட்சம் வரை – 25% வரி
– 15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரி

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.