Republic Day 2023: குடியரசு தின அணிவகுப்பை காண ஆன்லைன் புக்கிங் செய்வது எப்படி

இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று, இந்தியர்களாகிய நாம் நமது 74வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் ஆயுதப்படைகள், டெல்லி போலீசார் மற்றும் பலர் அணிவகுப்புக்காக ஒத்திகை பார்த்து வருகின்றனர். இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்கள் பிரதமரின் ‘ஜன் பாகிதாரி’ கருப்பொருளை பிரதிபலிக்கும் என்று பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே கூறினார்.

ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் மாபெரும் அணிவகுப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளைக் காண, மக்கள் இப்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் போர்ட்டலை மத்திய அரசு தொடங்கியுள்ளது. www.aamantran.mod.gov.in. என்ற போர்டலில் மக்கள் இதற்காக புக்கிங்கை செய்யலாம்.

ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டுகளை ஆர்டர் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்க பயனர்கள் இரண்டு தொலைபேசி எண்களை வழங்க வேண்டும். நிகழ்ச்சி மற்றும் டிக்கெட்டின் வகையைப் பொறுத்து டிக்கெட் விலை ரூ.20 முதல் ரூ.500 வரை மாறுபடும். ஆன்லைனில் டிக்கெட் வாங்குபவர்கள் உத்யோக் பவன் மற்றும் மத்திய செயலகத்திற்கு காம்ப்ளிமெண்டரி மெட்ரோ ட்ரிப்களையும் பெறுவார்கள்.

குடியரசு தின அணிவகுப்பு 2023 டிக்கெட்டுகள்: ஆன்லைனில் பெறுவதற்கான வழிமுறை

www.aamantran.mod.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும்.

– கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, நிகழ்வில் கலந்துகொள்ளும் நபர்களின் தேவையான தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.

– புகைப்படம் மற்றும் அடையாளச் சான்றுகளைப் பதிவேற்றவும்

– அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு OTP ஐ உள்ளிடவும்.

– உங்களுக்கு விருப்பமான டிக்கெட்டை தேர்வு செய்யவும்.

– ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.

– பணம் செலுத்தும் செயல்முறையை தொடரவும், ஒரு QR குறியீட்டைப் பெறுவீர்கள்.

– 2023 குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் QR குறியீட்டைக் காட்ட வேண்டும்.

டிக்கெட் வாங்குவதற்கான பூத்கள்/கவுன்டர்கள் பின்வரும் இடங்களில் அமைக்கப்படும்:

– சேனா பவன் (கேட் எண் 2)

– சாஸ்திரி பவன் (கேட் எண் 3)

– ஜந்தர் மந்தர் (பிரதான கேட் அருகில்)

– பிரகதி மைதானம் (கேட் எண் 1)

நாடாளுமன்றம் (வரவேற்பு அலுவலகம்)

– நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.