உக்ரைனுக்கு டாங்கிகள் அனுப்பும் திட்டம்: பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


உக்ரைனுக்கு டாங்கிகள் அனுப்புவதை பிரான்ஸ் நிராகரிக்கவில்லை என்று கூட்டு செய்தியாளர்கள் மாநாட்டில் அந்த நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

டாங்கிகள் அனுப்பும் திட்டம்

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி  ஜெலென்ஸ்கி இடையே சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சேலஞ்சர் 2 டாங்கிகள் மற்றும் கூடுதல் பீரங்கி அமைப்பு வழங்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

பிரித்தானியாவின் இந்த ராணுவ உதவியை தொடர்ந்து பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நேட்டோவின் முன்னணி உறுப்பு நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்க முன்வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

உக்ரைனுக்கு டாங்கிகள் அனுப்பும் திட்டம்: பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | France Does Not Rule Out Sending Tanks To Ukraine

ஆனால் இதற்கிடையில் உக்ரைனுக்கு லெக்லெர்க் (Leclercs) டாங்கிகளை அனுப்புவதற்கான வாய்ப்பை பிரான்ஸ் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கூட்டு செய்தியாளர்கள் மாநாட்டில் உக்ரைனுக்கு டாங்கிகள் அனுப்புவதை பிரான்ஸ் நிராகரிக்கவில்லை என்று அந்த நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

மேலும் டாங்கிகளை அனுப்புவது போர் நிலைமையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும், அத்துடன் உக்ரைனியர்களுக்கு திறம்பட பயிற்சி அளிப்பதற்கான நேரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மக்ரோன் குறிப்பிட்டு இருந்தார்.

உக்ரைனுக்கு டாங்கிகள் அனுப்பும் திட்டம்: பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | France Does Not Rule Out Sending Tanks To UkraineSkyNews

அதேசமயம் பிரான்ஸின் சொந்த பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும், “லெக்லெர்க்குகளைப் பற்றி, நான் இராணுவ அமைச்சரிடம் பணிபுரியச் சொன்னேன், ஆனால் எதுவும் நிராகரிக்கப்படவில்லை,”  தெரிவித்து இருந்தார்.

நட்பு நாடுகளுடன் இணைந்து முடிவு

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் உடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜேர்மன் ஜனாதிபதி ஸ்கோல்ஸ், ஆயுத விநியோகம் தொடர்பான அனைத்து எதிர்கால முடிவுகளும் அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

உக்ரைனுக்கு டாங்கிகள் அனுப்பும் திட்டம்: பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | France Does Not Rule Out Sending Tanks To UkraineSkyNews

உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்குவதற்கு அந்நாட்டின் மீது அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்ட ஜனாதிபதி ஸ்கோல்ஸ், இதுவரை உக்ரைனுக்கான அனைத்து ஆயுத விநியோகங்களும் மேற்கத்திய நட்பு நாடுகளுடன நெருக்கமான ஒருங்கிணைப்பில் நடந்ததாக குறிப்பிட்டார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.