கரும்பு சாகுபடி 115 லட்சம் ஏக்கராக உயர்வு: அமைச்சர் தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல், தேனி, கரூர், திருப்பூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-24ம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி முன்னிலை வகித்தனர். கலெக்டர் விசாகன் துவக்கவுரை வழங்கினார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘சர்க்கரை துறையை சீரமைக்க கரும்பு விவசாயிகளுக்கு ரூ.800 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கரும்பு விவசாயிகள் விவசாயம் செய்யும் பரப்பளவு 90 லட்சம் ஏக்கரிலிருந்து, 115 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.