பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர்…பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் 6 தமிழ் இறுதிப் போட்டி இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் இப்போட்டி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலில் 20 போட்டியாளர்கள் மட்டும் வந்த நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி உள்ளே வந்தார். இத்தனை நாட்கள் காதல், மோதல், நகைச்சுவை, வன்மம் என பல உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை நாம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களிடமிருந்தும் கண்டு ரசித்தோம்.

15 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர்
பிக் பாஸ் 6 தமிழ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே ஜி.பி. முத்து தானாகவே போட்டியில் இருந்து வெளியேறினார். அபருக்கு அடுத்ததாக இந்த போட்டியில் இருந்து நடிகை சாந்தி, ஷெரினா, நான்காம் வாரத்தில் மகேஸ்வரியும், ஐந்தாம் வாரத்தில் நிவாஷினியும், ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டரும், ஏழாம் வாரத்தில் குயின்ஸியும், எட்டாம் வாரத்தில் ராம் மற்றும் ஆயிஷாவும், ஒன்பதாம் வாரத்தில் தனலட்சுமியும், பத்தாம் வாரத்தில் மணிகண்டனும், அதுக்கு அடுத்த வாரம் ரச்சித்தாவும், பன்னிரண்டாம் வாரத்தில் ஏடிகேயும் வெளியேறினார்.

இன்று கிராண்ட் பினாலே
இதற்கிடையில் சமீபத்தில் கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னர், மிட் நைட் எவிக்‌ஷன் நடத்தப்பட்டது இதில் அதிர்ச்சிகரமாக மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இவரைத் தொடர்ந்து பணப்பெட்டி டாஸ்க்கில் 11,75,000 பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியினார். அப்பணப்பெட்டியை அமுதவாணன் எடுத்துச்சென்றது சக போட்டியாளர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. 

Vikraman

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அஸிம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர். இவர்களில், யார் சீசன் 6 நிகழ்ச்சியின் வின்னர், ரன்னர் என்பதை இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும். இதனிடையே சமிபத்தினங்களுக்கு முன்னர் வெளியான ப்ரோமோவில் அதிகமாக விக்ரமனை பிக் பாஸ் புகழ்ந்த காரணத்தினால் விக்ரமன் தான் அடுத்த டைட்டில் வின்னர் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Grand Finale எப்போது? எப்படி பார்ப்பது?
தற்போது இந்த சீசன் 6 நிகழ்ச்சியின் வின்னர், ரன்னர் என்பதை இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரிய வரும். மேலும் இந்த இறுதிப்போட்டியை விஜய் தொலைக்காட்சி அல்லது ஹாட்ஸ்டாரில் காணலாம். இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவார் என்பது குறிப்பிடதக்கது.

வின்னர் மற்றும் ரன்னர் பரிசுத் தொகை எவ்வளவு?
பிக் பாஸ் தமிழ் 6 வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கதிரவன் ஏற்கனவே பணப்பை டாஸ்க்கில் எடுத்ததால் 3 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும். 13 லட்சம் மதிப்புள்ள பிரீஃப்கேஸுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அமுதவாணன் வெளியேறியதால்  அந்தப் பணமும் கழிக்கப்பட்டு, வெற்றியாளருக்கு கோப்பையுடன் சேர்த்து ரூ.34 லட்சமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.